Monday, February 20, 2012

எங்கள் சாஸ்தா


கும்பிட்ட கரங்களைக் காத்திட வேண்டும்
குலதெய்வமே எங்கள் கலியுக வரதா
புளியங்குளம் வாழும் புகழான தெய்வமே
எங்களுக்கு புதுவாழ்வு தந்தருள்வாய்
கருணைக்கடலே கண்கண்ட தெய்வமே
கருணாகர மூர்த்தியே எங்களைக் காத்தருள்வாய்
ஆத்திமரத்தடியில் அமர்ந்து ஆட்சி செய்பவரே
எங்களை ஆதரித்து அருள்வாயே
அன்னதான பிரபுவே அன்பருக்கு
அன்பனே அச்சம் எல்லாம் போக்கிடுவாய்
மழை நன்றாய் பெய்ய வேண்டும்
இங்கு மககள் நன்றாய் வாழ வேண்டும்
எங்களுக்கு மனம் இரங்கி அருள்வாயே
கணேசன் தம்பியே எங்கள் கந்தனின் தம்பியே
கற்பூரப் பிரியன் நீயே 
பங்குனி உத்திரத்தில் பக்தியோடு கை தொழுதோம்
பகதர்களை காத்தருள்வாயே உன்னையே நம்பினோம்
உன் பாதம் சரணடைந்தோம்
கலியுக வரதா எங்கள் குலதெய்வமே சரணம் சரணம்
கலியுக வரதா அபயம் அபயம்
கலியுக வரதா கலியுக வரதா 
சரணம் சரணம் சரணம் .



தலைப்பாரம் எடுத்தவர்க்கு
த்னிவழியே நடந்தவர்க்கு
புலிப்பால் கொண்டு வந்தவர்க்கு
எங்கள் புளியங்குளம் அய்யனுக்கு
மங்களம் சுப மங்களம் .

Wednesday, February 1, 2012

இரவு கவிதை

யாராலும் திருடி படிக்க முடியாத ரகசிய புத்தகம் ! என்வே கனவுகளை  நேசிய்ங்கள் !


நேசிப்பது எல்லாம் கிடைத்துவிட்டால் கண்ணீர் து ளிக்கு மதிப்பு இல்லை !
கிடைப்பதை எல்லாம் நேசித்து விட்டால் கண்ணீருக்கு அவசியமில்லை !


வாழ்க்கை என்பது புத்தகத்தைப் போல ! ஒவ்வொரு பக்கத்தை திருப்பி படிக்கும் பொழுது புதிய புதிய அனுபவங்களை கற்றுக்கொள்ளலாம் !