Friday, April 1, 2011

திருமண சடங்குகள் - 6

மணவறையில் திருமணச்சடங்கு விபரம் : -

வினாயகர் முதலிய தெய்வவழிபாடு செய்ய வேண்டும் .

மணச்சடங்கிற்கு தேவையான பொருட்கள் : -

குத்து விளக்கு 1, நிறை நாழி 1 , சூடன் தட்டு , தூபக்கால் , தீபக்கால் ,பத்தி , மணி ,
பஞ்சபாத்திரம் , பத்தி ஸ்டாண்டு ,, கும்பக்குடம் 1 , பித்தளைக்குடம் 1 , செம்பு 4 , நூல்கண்டு (10 ம் நீர் ) 4 , கும்பவேட்டி 5 ( சிகப்பு 1 , பச்சை 1 , வெள்ளை 3 ஒவ்வொரு நிறத்திலும் 73 செ.மீ. அளவில் துணி , முக்காலி 1 , அரசாணிக்கால் கம்பு 1 + 1அடி நீளம் மாங்கால் கொப்பு 1 , அரிசிமாவு 200 கிராம் , தீப்பெட்டி 2 ,
பூலாங்கிழங்கு , செண்பகமொட்டு , கஸ்தூரி மஞ்சள் (எல்லாம் சேர்த்து 100 கிராம் ),கும்பத்திற்கு, ஒமச்சட்டி , பச்சை நெல் உமி 1 படி ,கை கட்டுவதற்குச் சிகப்புப் பட்டு , பச்சரிசி 3 கிலோ , நெல் 2 கிலோ , உளுந்து 200 கிராம் , அடை பொரி , ஆச்சாரியார் வஸ்திரம் ( அரை வேட்டி ,மேல் வேட்டி ) , பஞ்ச கவ்யம் , பால் 200 , விரலி மஞ்சள் 50 கிராம் , மஞ்சள் பொடி 50 கிராம் , குங்குமம் 50 கிராம் , விபூதி பாக்கெட் 1 , சூடன் 20 கிராம் ,சாம்பிராணி 25 கிராம் ,பத்தி பாக்கெட் 1 ,சந்தனம் , தேங்காய் 11 ,( அரசாணி ,ஊஞ்சள் , திருப்பூட்டு முதலியவற்றிற்கு ) , கதலி பழம் 25 , வெற்றிலைக் கட்டு 1 ,எலுமிச்சம் பழம் 2, வாழையிலை 15 , மாவிலைக் கொத்து , விடுபூ ( உதிரிப்பூக்கள் ) , விடு ஆரம் 9 , பூச்சரப்பந்து 1 , அச்சு வெல்லம் 50 கிராம் , களிப்பாக்கு 50 கிராம் , கற்கண்டு 50 கிராம் , நெய் 50 கிராம் , தயிர் 100 கிராம் , கோசல்ம் , கோமேயம் ( பசுஞ்சாணம் ), சமித்து , தர்ப்பை , நாற்காலி 2 , சில்லறை நாணயம் , முளைப்பாலிகை மண்கிண்ணம் 9 , நவதானியம் ( திருமணத்திற்கு முன் தினம் ஊற வைக்கவேண்டும் .) . நவதானியங்கள் 1 ) நெல் 2 ) கோதுமை , 3) துவரை , 4) பச்சைப்பயறு , 5) கடலை , 6)மொச்சை , 7) எள்ளு , 8) உளுந்து , 9) கொள்ளு

மணமகன் பெற்றோருடன் சடங்கு : -

புனித நீர் , பஞ்சகவ்வியம் , திருனீறு பெற்று வழிபாடு .
மணமகன் தன் தந்தையாருடன் நாட்கால் ( கப்பு வைத்த மாங்கால் ) பூசை செய்து , கன்னி மூலையில் கட்டிப் பால் ஊற்ற வேண்டும் .

மணமகன் தாய் மாமனார்ருடன் சடங்கு : -

மணமகன் வலக்கையில் காப்புக்கட்டுதல் (மஞ்சள் துண்டு , வெற்றிலை ,தடைவகைக்குஇரும்பு( சிறிய துண்டு) இவற்றை ம்ஞ்சள் கயிற்றில் முடிந்து கட்டுதல் )
தாம்பாளத்தில் உள்ள அரிசியை இரு கைகளாலும் இரு முறை அள்ளிப்போட்டு மூன்றாம் மூறை கையில் வைத்துக் கொண்டு , அதன் மேல் வெற்றிலை , பாக்கு , பழம் 2 , தேங்காய் வைக்கவேண்டும் மாப்பளளையின் வலக்கையில் மஞ்சள் முடிந்த காப்புக் கயிற்றை தாய்மாமனார் கட்டவேண்டும்

முளைப்பாலிகை ( முளை தெளித்தல் ): - ஊற வைத்த நவதானியத்தை சிறிய பெண் குழந்தையின் மூலமாக மாப்பிள்ளையின் தாய்மாமனாரிடம் கொடுத்து, தாய்மாமனார் மாப்பிள்ளையின் கையில் கொடுத்து, முளைப்பாலிகையில் 5 அல்லது 7 ல் ) வைக்கவேண்டும் . பின் அவற்றிற்குப் பால் , சந்தனம் , குங்குமம் , பூ முதலியன இட்டு பூசை செய்ய வேண்டும் . சிறுமிக்கு சந்தனம் , குங்குமம் , பூ கொடுத்து பழம் வெற்றிலை பணம் முதலியன கொடுத்து சிறப்புச்செய்யவேண்டும் .

பின் மணமகனுக்கு ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் தடவிய தேங்காய் , வெற்றிலை , பாக்கு , பழங்கள் , இவற்றுடன் முகூர்ததத்திற்கு உரிய புத்தாடையை வைத்து , முகூர்த்த மாலைகளுடன் வழங்கவேண்டும் .
இது போல் மணப்பெண்ணிற்கும் அவளது பெற்றோருடன் சடங்கு , தாய் மாமனாருடன் சடங்கு செய்து . காப்புக்கட்டி முலைப்பாலிகை இட்டு செய்ய வேண்டும் .
மணமகளுக்கும் அது போல் புத்தாடை வழங்க வேண்டும் .

மாங்கல்ய வழிபாடு : - மாங்கல்யத்திற்கு அபிசேகம் பூசை செய்து ஒரு தாம்பாளத்தில் தேங்காய் ( மஞ்சள் பூசியது ) , வெற்றிலை , பாக்கு , பழங்கள் , விரலி மஞ்சள் , பூக்களுடன் மாங்கல்யம் வைக்கப்பட்ட குங்குமச் செப்பினையும் வைத்துப் பெரியவர்களிடம் ஆசி பெறச் செய்ய வேண்டும் .

முதலில் மணமகனை முகூர்த்த ஆடை மாலைகளுடன் அலங்கரித்து அழைத்து வந்து மணவறைக்கு எதிரே இடப்பட்ட நாற்காலியில் மேற்கு முகமாக அமரச்செய்ய வேண்டும் .பின் மணமகளை முகூர்த்த ஆடை மாலைகளுடன் அழைத்து வந்து மணமேடைக்கு மேல்புறம் கிழக்கு முகமாக இடப்பட்ட நாற்காலியில் மணமகனுக்கு எதிரே உட்காரச் செய்ய வேண்டும் .

No comments:

Post a Comment