Follow by Email

Monday, August 29, 2011

குறுந் தகவல்கள்

ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் தோன்றினால் அது விஸத்தைப்போன்றது , நம்மிடம் உள்ள பல நூறு நல்ல நினைவுகளை இருவரும் சேர்ந்து அனுபவித்ததை மறக்கடித்துவிடும் !

முக்கியமானசெய்தி : - இடது காது அருகில் வைத்து தொலைபேசியோ அல்லது கைபெசியோ உபயோகிக்கவேண்டும் !
மிகவும் குளிர்ந்த நீர் உபயோகித்து மருந்து சாப்பிடாதீர்கள் !
இரவில் மிக அதிகப்படியான உணவு சாப்பிடாதீர்கள் !
காலையில் அதிகம் தண்ணீர் அருந்துங்கள் ! இரவில் குறைவாக தண்ணீர் குடியுங்கள் !
தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மட்டுமே !


Saturday, August 20, 2011

குறுந் தகவல்கள்

தவறுகள் செய்யும் போது வலியைத்தரும் !ஆனால் பல வருடங்கள் சென்ற பிறகு தவறுகளின் தொகுப்பு நமக்கு ஒரு வழிகாட்டி மாதிரி நம்மை முன்னேற்றிச்செல்லுவதற்கு உதவும் !

பென்சில் முனை எழுதுவதற்கு உதவுவது போல் மற்றவர்களின் சந்தோஸத்திற்கு உதவு ! முடியாவிட்டால் அழிப்பதற்கு உதவும் (ரப்பர் )அழிப்பானைப் போல் மற்றவர்களின் துயரத்தை துடைத்து விடு !

மற்றவர்கள் உன் நிலையைப் பார்த்து விரும்பாவிட்டால் கவலைப்படாதே !வேறு சிலர் இதே நிலையைப்பார்த்து உன்னை விரும்பக்கூடும் !

எதற்காகவும் யாருக்காகவும் உனது உண்மையான வழிமுறைகளை மாற்றாதே ! ஏனென்றால் உன்னைப்போல் வேறு யாராலும் நடக்க முடியாது !

2 ரவுண்டு பிராந்தி உணவு அருந்தும் 30 நிமிடங்களுக்கு முன் குடித்தால் உணவு நன்றாக செரிமானம் ஆகும் !
1 கிளாஸ் பீர் காலை எழுந்த உடன் குடித்தால் உடலில் உள்ள ஆர்காஙள் நன்கு வேலைசெய்யும் !
1 ரவுண்டு ஸ்காட்விஸ்கி தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராது
1 கிளாஸ் ஒயின் குளிப்பதற்கு முன் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு வராது !
சரக்காலே நல்ல விசயம் நடந்தால் சரக்கடிப்பது நல்லது தானே !

Friday, August 19, 2011

குறுந் தகவல்கள்

இருள் என்பதால் யாரும் கருவறையை வெறுப்பதில்லை !
நிம்மதி கிடைப்பதால் யாரும் கல்லறையை விரும்புவதில்லை !
இது தான் வாழ்க்கை !

இருதயம் என்பது பண்படுத்தப்பட்ட விளை நிலம் ! அதில் எந்த செடியை வைத்தாலும் அது நன்றாகவே வளரும் ! அது அன்பு என்றாலும் எதிர்ப்பு என்றாலும் !

25 ம் வருட திருமண நாள் வாழ்த்துக்கள்

உணவு உலகம் -- - - - - அ . ரா . சங்கரலிங்கம் - காந்திமதி தம்பதியினருக்கு 22 / 08 /2011 அன்று 25ம் வருட திருமண நாள் ! நல்வாழ்த்துக்கள் !

Tuesday, August 16, 2011

குறுந் தகவல்கள்

சிறிய தவறுகளை உடனடியாக சரி செய்து விடுங்கள் அவை பெரியவைகளாக மாறும் முன் ! ஏனெனில் நாம் சிறு கற்கள் தட்டித்தான் கீழே விழுவோம் !

நமது தேசத்தில் பல மதங்கள் உள்ளன ! ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் !
TEMPLE , CHURCH , MOSQUE -இம் மூன்று சொற்களும் 6 எழுத்துக்களை கொண்டது !
GEETA , BIBLE , QURAN - இம்மூன்று சொற்களும் 5 எழுத்தைக் கொண்டது !
இவைகள் பல எழுத்தை கொண்டாலும் அவை பல மதங்களுக்குறிய கருத்தை பலவிதமாகச்சொன்னாலும் அவை மதம் என்ற ஒரே கருத்தைதான் சொல்கின்றன ! எனவே மதம் ஒரு பொருட்டே அல்ல ! நாம் இந்தியர்கள் ! இந்தியர்கள் என்பதில் பெருமை அடைவோம் !

வாழ்க்கை என்பது இரசாயனம் போன்றது ! உனது கவலைகளை தண்ணீராக்கு ! கஸ்டங்களை நீராவிபோல் வெளியேற்று !உனது தவறுகளை வடிகட்டு ! உனது ஈகோவை கொதிக்கவை !அப்பொழுது தான் மகிழ்ச்சியெனும் கிறிஸ்டல் கிடைக்கும் !

ஒவ்வொரு பறவைக்கும் கடவுள் உணவைப் படைத்துள்ளார் ! ஆனால் பறவையின் கூட்டிற்குள் இல்லை !உணவிற்காக பறவைகள் வெளியே சென்று தான் உணவைத் தேடி அலைகின்றன ! அது போல் நாம் கடினமாக உழைத்தால் எந்தவித உயர்ந்த நிலையையும் அடையமுடியும் !