Follow by Email

Friday, November 25, 2011

ஜயவேல்: தனிக் குடித்தனம்

ஜயவேல்: தனிக் குடித்தனம்: பிறந்ததில் இருந்து 61 வருடங்கள் ஒரே வீட்டில் இருந்து விட்டு திருமணமாகி 38 ஆண்டுகள்கழித்து இப்பொழுது தனிக்குடித்தனம் 27 / 11 / 2011 அன்று க...

தனிக் குடித்தனம்

பிறந்ததில் இருந்து 61 வருடங்கள் ஒரே வீட்டில் இருந்து விட்டு திருமணமாகி 38 ஆண்டுகள்கழித்து இப்பொழுது தனிக்குடித்தனம்
27 / 11 / 2011 அன்று காலை 3 மணியளவில் கணபதிஹோமம் செய்த பின் பால் காய்ச்சி வேறு வீடு செல்லப் போகின்றோம்

Friday, September 23, 2011

அம்மாவின் மறைவு


FRIDAY 16 SEPTEMBER 2011
தொப்புள்கொடி உறவு தொடர்பறுந்து தொலைதூரம் போனதம்மா!

 
 உலகின் உறவுகளில் உன்னதமான உறவு
  பெற்றெடுத்த தாய் என்றால் பெரிதும் சர்ச்சையில்லை.
உதிரம் கொடுத்தாய், உயிரும் கொடுத்தாய்
   பேணி வளர்த்தாய், பெரியவனானேன்.

உணவு ஊட்டும் உன்னத வேளைதனில்,விலகி ஓடினாலும்
    தந்தை இவர், தனயன் இவர் என்றெனக்கு உலகின்
உறவுகள் தெரிந்திட உணர்வையும் ஊட்டியே வளர்த்தாய்
     உன்னத மனிதனாய் உலகில் வலம் வர ஊக்குவித்தாய்
உறவை மட்டும் சொல்லித்தந்த நீ, பிரிவைச் சொல்லித்தரவோ
    உயிரைத்துறந்து உறவுகளை மறந்து தனியே சென்றாய்!

பாலூட்டிச் சீராட்டி பார்த்துப் பார்த்து வளர்த்த என் தாயே
    படுக்கையில் நீ வீழ்ந்தபோது பரிதவித்துத்தான் போனேன்.
பம்பரமாய்ச் சுழன்று  நீ வேலை பார்த்த வீட்டினிலே
    நிற்பதற்கும் நடப்பதற்கும் பிடிக்க ஒரு கம்பி தேவைப்பட்டதே!
பத்து பேருக்கு நாளும் அன்னமிட்ட உன் கைகளால்
  பசித்திட்ட வேளைதனில் எடுத்துண்ண இயலாமல் போனதேன்?
பாடாய்ப் படுத்திய நோய் உன்னை பச்சிளங்குழந்தையாக்கியதால்,
   பசி,தூக்கம், அன்னம் மறந்தாய், பாலைக் கொடுத்தோம்!

தூக்கம் தொலைத்தாய், துயரம் வளர்த்தோம், கொடுத்த மருந்தினில்
  துவண்ட உன் உடல் கண்டு வெறுத்தே விட்டது  எங்கள் வாழ்வு.
காசிக்குப் போனபோது என் தந்தை உனக்கு அணிவித்த 
  
கண்ணாடி வளையல் கடைசிவரை உன்னுடன் வந்ததே!
காலமெலாம் காப்பாற்றுவாய் என்றெண்ணிய எங்களை மட்டும்
 
கைவிட்டு செல்ல மனம் உனக்கு வந்ததேன்?
தாலாட்டி உறங்க வைத்த  தாயின் மடியே சொர்க்கமென்பேன் எனைச்
  சீராட்டி வளர்த்த உன் கைகள் சிறிதும் செயல்பட மறந்த போதும்
அமுதமொழி அருளிய உன் வாய்தனில் அரிசியிட்ட பொழுதினிலும்,
  அடுக்கி வைத்த சிதையினிலே அனலில் நீ வெந்தபோதும்
தொப்புள்கொடி உறவு  தொடர்பறுந்து தொலைதூரம் இன்று போனபோதும்
சொர்க்கமெல்லாம் சோகமாகி என் வாழ்வின் அர்த்தம் தொலைந்ததம்மா!

டிஸ்கி: 1)04.09.2011 நண்பகல் 12.30 மணியளவில்,எங்களையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு, இறைவனடி சேர்ந்த என் அன்னைக்கு அர்ப்பணம்.
                2) தகவலறிந்து, நேரிலும், செல்லிலும்,கமெண்டிலும், Google Buz மற்றும் FB யிலும்  இரங்கல் தெரிவித்த பதிவுலக சொந்தங்களுக்கு நன்றி.
                3) இயல்பு நிலை திரும்பியவுடன், பதிவுலகம் பக்கம் வருகிறேன்.

Monday, August 29, 2011

குறுந் தகவல்கள்

ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் தோன்றினால் அது விஸத்தைப்போன்றது , நம்மிடம் உள்ள பல நூறு நல்ல நினைவுகளை இருவரும் சேர்ந்து அனுபவித்ததை மறக்கடித்துவிடும் !

முக்கியமானசெய்தி : - இடது காது அருகில் வைத்து தொலைபேசியோ அல்லது கைபெசியோ உபயோகிக்கவேண்டும் !
மிகவும் குளிர்ந்த நீர் உபயோகித்து மருந்து சாப்பிடாதீர்கள் !
இரவில் மிக அதிகப்படியான உணவு சாப்பிடாதீர்கள் !
காலையில் அதிகம் தண்ணீர் அருந்துங்கள் ! இரவில் குறைவாக தண்ணீர் குடியுங்கள் !
தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மட்டுமே !


Saturday, August 20, 2011

குறுந் தகவல்கள்

தவறுகள் செய்யும் போது வலியைத்தரும் !ஆனால் பல வருடங்கள் சென்ற பிறகு தவறுகளின் தொகுப்பு நமக்கு ஒரு வழிகாட்டி மாதிரி நம்மை முன்னேற்றிச்செல்லுவதற்கு உதவும் !

பென்சில் முனை எழுதுவதற்கு உதவுவது போல் மற்றவர்களின் சந்தோஸத்திற்கு உதவு ! முடியாவிட்டால் அழிப்பதற்கு உதவும் (ரப்பர் )அழிப்பானைப் போல் மற்றவர்களின் துயரத்தை துடைத்து விடு !

மற்றவர்கள் உன் நிலையைப் பார்த்து விரும்பாவிட்டால் கவலைப்படாதே !வேறு சிலர் இதே நிலையைப்பார்த்து உன்னை விரும்பக்கூடும் !

எதற்காகவும் யாருக்காகவும் உனது உண்மையான வழிமுறைகளை மாற்றாதே ! ஏனென்றால் உன்னைப்போல் வேறு யாராலும் நடக்க முடியாது !

2 ரவுண்டு பிராந்தி உணவு அருந்தும் 30 நிமிடங்களுக்கு முன் குடித்தால் உணவு நன்றாக செரிமானம் ஆகும் !
1 கிளாஸ் பீர் காலை எழுந்த உடன் குடித்தால் உடலில் உள்ள ஆர்காஙள் நன்கு வேலைசெய்யும் !
1 ரவுண்டு ஸ்காட்விஸ்கி தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராது
1 கிளாஸ் ஒயின் குளிப்பதற்கு முன் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு வராது !
சரக்காலே நல்ல விசயம் நடந்தால் சரக்கடிப்பது நல்லது தானே !

Friday, August 19, 2011

குறுந் தகவல்கள்

இருள் என்பதால் யாரும் கருவறையை வெறுப்பதில்லை !
நிம்மதி கிடைப்பதால் யாரும் கல்லறையை விரும்புவதில்லை !
இது தான் வாழ்க்கை !

இருதயம் என்பது பண்படுத்தப்பட்ட விளை நிலம் ! அதில் எந்த செடியை வைத்தாலும் அது நன்றாகவே வளரும் ! அது அன்பு என்றாலும் எதிர்ப்பு என்றாலும் !

25 ம் வருட திருமண நாள் வாழ்த்துக்கள்

உணவு உலகம் -- - - - - அ . ரா . சங்கரலிங்கம் - காந்திமதி தம்பதியினருக்கு 22 / 08 /2011 அன்று 25ம் வருட திருமண நாள் ! நல்வாழ்த்துக்கள் !

Tuesday, August 16, 2011

குறுந் தகவல்கள்

சிறிய தவறுகளை உடனடியாக சரி செய்து விடுங்கள் அவை பெரியவைகளாக மாறும் முன் ! ஏனெனில் நாம் சிறு கற்கள் தட்டித்தான் கீழே விழுவோம் !

நமது தேசத்தில் பல மதங்கள் உள்ளன ! ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் !
TEMPLE , CHURCH , MOSQUE -இம் மூன்று சொற்களும் 6 எழுத்துக்களை கொண்டது !
GEETA , BIBLE , QURAN - இம்மூன்று சொற்களும் 5 எழுத்தைக் கொண்டது !
இவைகள் பல எழுத்தை கொண்டாலும் அவை பல மதங்களுக்குறிய கருத்தை பலவிதமாகச்சொன்னாலும் அவை மதம் என்ற ஒரே கருத்தைதான் சொல்கின்றன ! எனவே மதம் ஒரு பொருட்டே அல்ல ! நாம் இந்தியர்கள் ! இந்தியர்கள் என்பதில் பெருமை அடைவோம் !

வாழ்க்கை என்பது இரசாயனம் போன்றது ! உனது கவலைகளை தண்ணீராக்கு ! கஸ்டங்களை நீராவிபோல் வெளியேற்று !உனது தவறுகளை வடிகட்டு ! உனது ஈகோவை கொதிக்கவை !அப்பொழுது தான் மகிழ்ச்சியெனும் கிறிஸ்டல் கிடைக்கும் !

ஒவ்வொரு பறவைக்கும் கடவுள் உணவைப் படைத்துள்ளார் ! ஆனால் பறவையின் கூட்டிற்குள் இல்லை !உணவிற்காக பறவைகள் வெளியே சென்று தான் உணவைத் தேடி அலைகின்றன ! அது போல் நாம் கடினமாக உழைத்தால் எந்தவித உயர்ந்த நிலையையும் அடையமுடியும் !Friday, July 29, 2011

குறுந் தகவல்கள்

முட்டையை உடைத்தால் அத்னுடைய வாழ்க்கை முடிந்து விடும் ! ஆனால் அதே முட்டை தானக உடைந்தால் முட்டையிலிருந்து குஞ்சு வெளி வரும் !அதிலிருந்து ஒரு வாழ்க்கை ஆரம்பமாகும் !பெரிய காரியங்கள் எல்லாம் உள் இருந்தே தோன்றுகின்றது ! என்வே உன் மீது நம்பிக்கை வைத்து செயல்படு !

அழகிய நாள் உனக்காகவே காத்திருக்கின்றது !குறிக்கோளுடன் நட ! நம்பக்கையுடன் ஒடு !

Which is the most dangerous alphabet ?
W is the most dangerous alphabet
Because all WORRIES start with " W "
who ? why ? what ? when ? which ? whom ? where ? war ! wine !

அம்மா மகனிடம் : - மகனே என்ன செய்கிறாய் ?
மகன் அம்மாவிடம் : - படித்துக்கொண்டு இருக்கின்றேன் .
அம்மா மகனிடம் : - நல்லது ! என்ன படிக்கின்றாய் ?
மகன் அம்மாவிடம் : - உன் மருமக அனுப்பின sms படிக்கின்றேன்!

நாம் நம் தவறுகளைக் காக்கும் நல்ல வக்கீலாக இருக்கின்றோம் !
ஆனால் அடுத்தவர் தவறு செய்யும் போது நாம் நல்ல நீதிபதியாக மாறிவிடுகின்றோம் !

Wednesday, July 27, 2011

குறுந் தகவல்கள்பார்த்து பார்த்து பழகும் நிமிடங்களை விட பார்க்காமலே இருக்கும் நிமிடங்களில் தான் பிரியம் அதிகம் !

உண்மையான அன்பை உன் அருகில் இருப்பவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட அன்பு என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியும் படி நீ செய்வாயாக !

புத்திசாலித்தனம் உன்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் ! ஆனால் உனது நன் நடத்தைதான் உன்னை உயர்ந்த இட்த்தில் நிலைக்கச்செய்யும் !

உன்னிடம் பிறர் காட்டும் சிறிய அன்பையும் எப்பொழுதும் மறக்காதே ! அதே போல் பிறர்செய்யும் சிறிய தவறுகளை நினைவில் வைக்காதே !

வெற்றி பெறும் குதிரைக்கு தெரியாது ஏன் ஒடுகின்றோம் எதற்காக ஒடுகின்றோம் என் ஆனால் அது படுகின்ற அடியால் வ்லியினால் ஒடுகின்றது !உன் வாழ்க்கை என்பது குதிரை ரேஸ் போல , கடவுளே குதிரை மீது அமர்ந்து ஒட்டுபவர். உனக்கு வலி ஏற்பட்டால் கடவுள் உன்னை வெற்றி பெறச்செய்வதற்காகவே அதை கொடுத்துள்ளார் என எண்ணு !

Tuesday, July 26, 2011

குறுந் தகவல்கள்

ஒரு மகிழ்ச்சியான இனிய உறவுகள் மன்னிக்கத் தெரிந்த இருவரிடமும் இருந்தால் தான் தொடரமுடியும் !

முறிந்த உறவுக்கு காரணம் என்னவென்றால் ஒன்று நீ மாறிவிட்டாய் என நினைப்பார்கள் அல்லது உன்னைப்பற்றி அவர்களின் நினைப்பு மாறியிருக்கும் !

மனைவி கணவனிடம் : - பாவி மனுசா இவதான் உன் சின்ன வீடா ? பார்க்க பிச்சைக்காரி மாதிரி இருக்காள் !
கணவன் மனைவியிடம் : - தூக்கத்தில் கண்ணாடி முன் நின்று உளறாதே !

ஒரு பெரிய ஹோட்டலில் உள்ள அறிவிப்பு -- எங்களது தொழிலாளர்கள் எல்லோரும் திருமணம் ஆனவர்கள் ! என்வே அவர்களுக்கு தெரியும் எப்படி சொன்னதைச் செய்ய வேண்டும் என்று !

வாழ்க்கையில் யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே ! அவர்கள் உன் கண்ணிருக்கு தகுதியானவர்கள் அல்ல ! உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள் என்றுமே உன்னை அழ விடமாட்டார்கள் !

Sunday, July 24, 2011

மனிதம் மரத்த மர(ரு)த்துவர்கள்

மனிதம் மரத்த மர(ரு)த்துவர்கள்.

இது எனக்கு ஏற்பட்ட ஒரு கொடிய அனுபவம். இனி ஒருவருக்குக் கூட, இந்தக்கொடுமை நிகழக்கூடாதென்பதே என் விருப்பம். மருத்துவ தொழிலின் மகத்துவம் அறிந்தவன்தான் நானும். எனினும், சிலமனிதம் மறந்த மருத்துவர்கள் செய்யும் கொடுமைகள் சொல்லாமல் தீராது.

கடந்த ஐந்து நாட்களாக என் அன்னை நோய்வாய்ப்பட்டு, நெல்லையிலுள்ள, எனக்கு மிகவும் வேண்டப்பட்ட மருத்துவரின் மருத்துவ மனையில், சிகிச்சை பெற்றுவருகிறார். என் அன்னைக்கு வயது எண்பதை நெருங்குகிறது.

அந்தக் கால உடம்பு. அறுபது வயது வரை, ஓடியாடி உழைத்ததினாலோ என்னவோ, எழுபதின் தொடக்கம்வரை, வாழ்க்கைத்துணை சொல்லும் வார்த்தைகளை மட்டுமே மந்திரச்சொல்லாய் மதித்து, என் தந்தைக்கு ஓடியாடித் துணையாயிருந்தவர். தனக்குத் தலைவலி, காய்ச்சல் என்று என் தாய் சொல்லி நான் கேட்டதில்லை.

ஐம்பது வருடங்களுக்கும் மேலாய், மனமொத்த தம்பதியராய் மணவாழ்க்கை வாழ்ந்த என் தந்தை, எண்பத்தியோரு வயதில், எழுபத்தியோரு வயதான என் அன்னையை மறந்து, விண்ணுலகம் சென்ற நாளில், என் அன்னை அழுத அழுகையினை வெறும் வார்த்தைகளால் விளங்க வைக்க இயலாது. அன்று தொடங்கியது என் அன்னையின் உடல்நல பாதிப்புகள்.

பிரிந்து சென்ற தன் உயிரை நினைத்து, உணவை வெறுத்து, உறக்கம் துறந்த நாட்களை எண்ணிவிட இயலாது. சிறிது சிறிதாய், நோய்கள் அவளை நோக்கி வந்தன. அவ்வப்போது உடல்நலக்கோளாறுகள் வந்து சென்றாலும், அன்பு மகன்களையும், அவர்கள் பெற்றெடுத்த பேரக்குழந்தைகளையும் பார்த்துத் தன் உடல்நலக்கோளாறுகளை உதறி வந்தாள். உடல் நலம் தேறி வந்தாள். வீட்டிற்குள் மட்டும் நடமாடி வந்தாள்.

கடந்த திங்களன்று, வலது காலை எடுத்து வைக்க வரவில்லையென்று வருத்தப்பட்டார். அவசர சிகிச்சைக்கென மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். உணவை உண்ண முடியாமல், ஒவ்வொரு நாளும் அவஸ்த்தை. எழுந்து சென்று, இயற்கை உபாதைகளை கழிக்க முடியாதென்பதால், சிறுநீரை வெளியேற்ற 'யூரோ பேக்'.

இத்தனை அவஸ்தைகளுக்கு நடுவில், மூளையில் ரத்தக்குழாய்களில் பாதிப்பு உள்ளதா என்று பார்க்க, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க மருத்துவர் பரிந்துரைத்தார். கூடவே, வயிற்றுப் பகுதியிலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து வந்தால், நல்லதென்றார். பிற்பகல் மூன்று மணியிலிருந்தே, சிகிச்சை எடுத்த மருத்துவ மனையிலிருந்து,நெல்லையின் பேர் சொல்லும் நதியின் பெயர் கொண்ட ஸ்கேன் சென்டரைத் தொடர்பு கொண்டதில், ஆறு மணிக்குத்தான் அப்பாயின்மென்ட் என்றனர்.

ஆறு மணிக்கு ஆம்புலன்ஸூம் வந்தது. ஸ்கேன் எடுக்க இடையூறாய் இருக்குமென்பதால், சிறுநீர் வெளியேறி வந்த சிறு குழாயினையும் அடைத்து வைத்தனர். ஸ்கேன் சென்டர் சென்றவுடன், பணம் பெற்றுக்கொள்ள பல்லிளித்தனர். பணம் செலுத்திய பின்னர், அவர்களின் நடவடிக்கைகளில் நல்லதொரு மாற்றம் கண்டேன். அவசரமாய்ப் புறப்பட்டு ஸ்கேன் சென்டரை அடைந்தவுடன், அரை மணி நேரத்தில், ஒரு லிட்டர் தண்ணீரை அருந்தி, சிறுநீரகங்கள் தாங்குமளவிற்கு பொறுத்து இருந்தால் மட்டுமே, சரியாக ஸ்கேன் எடுக்க முடியுமென்றனர். அரைமணியென்று சொன்னவர்கள், மூன்று மணி நேரம் முழுதாய் சென்ற பின்னரும் ஸ்கேன் எடுக்க அழைத்த பாடாயில்லை. ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் என் அன்னை.

அந்த ஸ்கேன் சென்டரில் அத்தனை வசதி. காற்றோட்டம் என்பது கானல் நீர் போல் இருந்தது. மூன்று பக்கம், கான்க்ரீட் சுவர்கள். முன்பக்கம், கண்ணாடித் தடுப்பு. ஓடிக்கொண்டிருந்த மின் விசிறிகளையும், தியேட்டரில் படம் போட்டவுடன், மின் விசிறிகளை அணைத்து விடுவது போல், சென்று சில நேரம் கழித்தவுடன், ஓய்வு கொடுத்தே வைத்திருந்தனர். அப்படி புழுங்கிக்கொண்டிருந்த அறையினில், சுமார் ஐம்பது பேர்கள் காத்திருந்தனர்.

ஏன் காலதாமதமாகிறது என்று கேட்டால், இதோ அடுத்து உங்களுக்குத்தான் எடுக்கப்போகிறோம் என்று போக்கு காட்டி வந்தனர். அதிகளவில் தண்ணீர் அருந்தியதால், என் அன்னைக்கு, சிறு நீர் கழிக்க முடியாமல் அவஸ்த்தை ஒருபுறம். நேரம் செல்ல செல்ல, பசி வந்து பட்ட அவஸ்த்தைகள் மறுபுறம். எங்களை இந்த சென்டருக்கு அனுப்பி வைத்த மருத்துவருக்கு(அவரும் என் உற்ற நண்பர்தான்), தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன். அவரும், சென்டரை தொடர்பு கொண்டு உடனே ஸ்கேன் முடித்து அனுப்பி வைக்க அறிவுறுத்தினார். ஸ்கேன் சென்டர் வைத்திருப்பவர்கள், அருகிலுள்ள மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்பதால், அந்த மாவட்டத்தில் அரசுத் துறையில் பணிபுரியும் என் மருத்துவ நண்பர் ஒருவர் மூலமும், ஸ்கேன் சென்டர் மருத்துவரிடம் சொல்ல சொன்னேன்.

வந்து சிக்கி விட்டார்கள், ஸ்கேன் எடுத்து விட்டுத்தானே செல்ல வேண்டும் என்ற உதாசீனம் அவர்களிடம். எண்பது வயதை நெருங்கும் என் அன்னை அடைந்த துன்பங்கள் அப்பப்பா! ஸ்கேன் மெஷினில் கோளாறாம். ஒவ்வொரு நபரையும், ஒரு முறைக்கு பல முறை அழைத்து ஸ்கேன் எடுத்துக கொண்டிருந்தனர். காத்துக்கிடப்பவர்கள் காத்தே கிடந்தனர். அதனை சரி செய்ய, வல்லுநர் எவரும் அழைக்கபடாமலே, அங்கிருந்த மருத்துவ நிபுணர்களே(!), இயந்திரங்களுடன் மல்லாடிக்கொண்டிருன்தனர்.

எனக்கு தெரிந்த மருத்துவர்கள் இருவர், விரைவில் அனுப்பி வைக்க பரிந்துரை செய்ததினால்தானோ என்னவோ, இரவு பத்து மணிக்கு, எங்கள் முறை வந்தது. முக்கால் மணி நேரத்தில், ஸ்கேன் முடித்து வெளியில் வந்தால், அங்கிருந்த ஆம்புலன்சில் ஏறி, பணியிலிருந்த மருத்துவர் பறந்து விட்டார். அவர் ஆம்புலன்சில் ஏறச் செல்லும்போதே, அன்னையின் நிலையினைக் கூறி, மருத்துவரை மாற்று வாகனத்தில் அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டேன்.

மருத்துவரல்ல அவர் மனிதம் மரத்துப் போனவர் என்று நான் அறிந்து கொண்டேன். சென்ற வாகனம் அரைமணி நேரம் திரும்பவில்லை. அந்த இரவு வேளையில், அடுத்த ஆம்புலன்ஸ் வரவைக்கவும் முடியாமல், ஆட்டோவில் ஏற்றி செல்ல, அன்னையின் உடல்நிலை ஒத்துழைக்காததினாலும், பட்ட அவஸ்த்தை சொல்லி மாளாது. விசாரித்ததில், வீட்டுக்கு செல்லும் வழியில், மருத்துவர் தன மனைவி, மக்களுக்கு ஷாப்பிங் முடித்து சென்றதில், சுணக்கம் என்றார் ஓட்டுனர்.

அந்த ஸ்கேன் சென்டரின் உரிமையாளரும் ஒரு மருத்துவர்தான்.அவரிடம் சென்று முறையிட்டேன். 'இப்ப வந்திரும்' என்ற இரு வார்த்தைகள் மட்டுமே இயந்திரத்தனமாய் வந்து விழுந்தது அவர் வாயிலிருந்து. செவிடன் காதில் ஊதிய சங்கென்று, என்னை நானே நொந்துகொண்டு, வந்து சேர்ந்த ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன் என் அன்னையை.

1 . மருத்துவமனையில் ள்நோயாளிகளாய் இருப்பவர்களை அழைத்து வரும் போது, இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப, சரியான நேரத்திற்கு அழைத்து வரலாம். அதிலும், நோய்வாய் பட்ட, வயதானவர்கள் என்றால் அதிக கவனம் எடுத்து காக்க வைக்காது இருந்திருக்கலாம்.

2 .மருத்துவர்களை விட, நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கலாம்.

3.அந்த மர(ரு)த்துவரை, ஒரு காரிலோ, ஆட்டோவிலோ வீட்டிற்கு அனுப்பிருக்கலாம்.

4. அவசர அவசரமாய் ஆம்புலன்சில் ஏறிப்பறந்த மர(ரு)த்துவர், நோயாளியின் நிலையை சற்றே சிந்தித்து பார்த்திருக்கலாம்.

டிஸ்கி: வாய் விட்டு புலம்பிய பின்னரும், காது கொடுத்து கேட்காத அந்த மருத்துவர்கள் மீது, நுகர்வோர் சேவை குறை பாட்டின் கீழ் குற்றச்சாட்டு செய்ய முயற்சிகள் தொடங்கிவிட்டேன்

Friday, July 8, 2011

குறுந் தகவல்கள்

ஒரு காதல் கதை : - ஒருத்தன் கண்ணு தெரியாத பெண்ணை காதலித்தான் . என்னை கை விடமாட்டீர்களே என் அவள் கேட்டாள் ! கண்டிப்பாக உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று அவன் சொன்னான் . அவளுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்து அவளுக்கு பார்வை கிடைத்தது . அப்பொழுது தான் தெரிந்தது அவனுக்கு பார்வை கிடைய்யாது என்று , அதனால் அவனை கல்யாணம் செய்ய ம்றுத்து விட்டாள் ! அவன் சிறிது தூரம் சென்று அவ்ளிடம் கடைசியாக ஒன்று சொன்னான் . என் கண்ணை பத்திரமாக பார்த்துக்கொள் ! இது தான் உண்மையான காதல் !

வாழ்க்கை நமக்கு அழுவதற்கு நூறு காரணங்களைத் தரலாம் ஆனால் ஒரு நண்பன் நமக்கு ஆயிரம் காரணங்களை சிரிப்பதற்கு தரலாம் ! எனவே எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருங்கள் !

நீ தனிமையில் இருக்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறதோ அது தான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கும் எனவே எப்பொழுதும் நல்லதே நினைக்கவும்- விவேகானந்தர் !

கோபம் என்பது பிறர் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை - புத்தர் - எனவே வாழ்க்கையில் பதற்றமடையாமல் எப்பொழுதும் புன்சிரிப்புடன் இருக்கவேண்டும் !

Thursday, June 23, 2011

குறுந் தகவல்கள்

சிறு சிறு சண்டை சச்சரவுகள் இருந்தால் தான் ஒருவரின் உண்மையான நேசிப்பு தெரியும் ! எனவே வாழ்க்கையில் சிறுசிறு சண்டை ச்ச்சரவு உனது வாழ்வில் இருக்கட்டும் !அப்பொழுதுதான் உன்னை நேசிப்பவர்களின் உள்ளம் புரியும் !

பணத்தை நேசிக்காதே ! ஏனென்றால் அது படுக்கையைத் தரும் ! ஆனால் தூக்கத்தை தராது !அது புத்தகத்தைத் தரும் ஆனால் அறிவைத் தராது !
அது பணக்காரத் தன்மையைத்தரும் ! ஆனால் மகிழ்ச்சியைத் தராது ! எனவே உனது பணத்தை எல்லாம் எனது கண்க்குக்கு மாற்றிவிடு !

கோபக்கார கணவன் மனைவி போட்டோ மேல் கத்தியை எறிகின்றான் ஆனால் குறி தவறி விடுகின்றது ! அப்போது அவன் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகின்றது ! நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றேர்கள் என் கேள்வி கேட்க கண்வன் சிறிது குறி தவறிவிட்டது எனக்கூறுகின்றான் !

குறுந் தகவல்கள்

பணம் இருந்தால் செத்த காதலிக்கு கூட தாஜ்மகால் கட்டலாம் !
ஆனால் பணம் இல்லை என்றால் உயிர் உள்ள காதலிக்கு தாலி கூட கட்ட முடியாது!

கணவன் மனைவியிடம் : - நீ தான் என் மனைவியாக வருவாய் என்று என்
பள்ளிக்கூட ஆசிரியருக்கு முன்னாடியே தெரிந்திருக்கின்ற்து !
மனைவி கணவனிடம் : - எப்படி சொல்கிறீர்கள் !
கணவன் மனைவியிடம் : - ஆசிரியர் நீ பன்னி மேய்க்கத்தான் லாயக்கு என்று அப்பவே சொன்னாரே !

இப்பொழுது உள்ள இளம் தலைமுறையினர் facebook யைகாதலிக்கின்றனர் ஆனால் புத்தகத்தை கையில் எடுத்து படிப்பதற்கு தயாரகைல்லை !

ஒரு காதலி கூறியது : - நான் ஒரு போதும் சாகமாட்டேன் என் காதல் தோல்வி அடைந்தால் ! ஏனென்றால் எனது காதலனுக்கு வேறு ஒரு காதலி கிடைப்பாள்
ஆனால் எனது பெற்றோருகு என்னைப்போல ஒரு மகள் கிடைக்க மாட்டாள் !

உன் அன்பெனும் சிறையில் சிக்கிக் கொண்டேன் ! தவறுகள் செய்தால் த்ண்டித்துவிடு ஆனால் விடுதலை மட்டும் செய்து விடாதே !

மது குடிப்பதால் மூளையின் உள் என்னவெல்லாம் இருக்கின்றதோ அது எல்லாம் வெளியே வந்து விடும் ! எனவே பரீட்சை எழுதும் முன் மதுகுடி !இதுவே வெற்றியின்ரகசியம் ! தண்ணியை போடுகிறோம் தாறுமாற எழுதுகின்றோம் பரீட்சையை !

Saturday, June 11, 2011

குறுந் தகவல்கள்

கோபம் : - நம்மை நேசிப்பவர்களை யோசிக்க வைக்கும் !
அன்பு : - நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்கவைக்கும் !

ஒரு பக்கெட்டில் 10 லிட்டர் தண்ணீர் இருக்கிறது ! ஒரு ஆள் அதி எதையோ போட்டார் , போட்டவுடன் பக்கெட்டில் தண்ணீர் குறைந்து போய் விட்டது ! எப்படி ?
யோசியுங்க !
பக்கெட்டில் ஒரு ஒட்டையை போட்டார் ! அதனால் தண்ணீர் அளவு குறைந்து போய்விட்டது !

மகன் நன்கு குடித்துவிட்டு வீட்டிற்கு வருகின்றான் ! தந்தை பார்ப்பதற்கு முன் ஒரு லேப் டாப் எடுத்து அதி வேலை செய்கின்றான் !
தந்தை மனிடம் : - நீ குடித்திறுக்கின்றாயா ?
மகன் தந்தையிடம் : - இல்லையே !
தந்தை மனிடம் : - குடிக்கவில்லை என்றால் ஏன் என் சூட்கேஸ் எடுத்து என்ன செய்கிறாய் ?அதை ஏன் திறந்து வைத்துக் கொண்டு இருக்கின்றாய் ?

குறுந் தகவல்கள்

கணவன் குடும்பத்தின் தலைவன் - தலை ! அப்படி எனில் மனைவி யார் ? யோசிங்க ! மனைவி - குடும்பத்தின் கழுத்து ! தலையை அவ்ள் விருப்பப்படி எந்த பக்கமும் எப்படியும் திருப்பும் கழுத்து !

பாசம் ஒரு காட்டாறு மாதிரி ! இருப்பது நமக்கு தெரியாது ! ஆனால் அது இல்லாமல் நம்மால் இருக்கமுடியாது !

ஒரு நண்பனை பற்றிய இதயத்தைத் தொடும் வார்த்தை - நான் எந்த வித விளக்கமும் எனது நண்பனுக்கு கொடுக்கவேண்டியதில்லை ஏன் என்றால் எனது மெளனத்திலும் எனது நிலை பற்றி புரிந்து கொள்வான் !

Thursday, June 9, 2011

குறுந் தகவல்கள்

உன்னால் சில நேரங்களில் சரியான வார்த்தைகளை சொல்லமுடியாது .அப்படிப்பட்ட நேரங்களில் புன்னகைசெய் ! வார்த்தைகள் குழப்பம் விளைவிக்கலாம் ஆனால் புன்னகை மற்றவர்களை மயக்கும் ! மாற்றும் !

வெளி நாட்டிலிருந்து திரும்பும் தந்தை மகனிடம் : உன் அம்மா எங்கே ?
மகன் : அம்மா இறந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது !
தந்தை : ஏன் என்னிடம் உடனடியாக கூறவில்லை ?
மகன் : உங்களுக்கு ஒரு ச்ர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று தான் சொல்லவில்லை

மகிழ்ச்சியின் உச்சகட்டமே போதுமென்ற மனமே அந்த நிலையை அடைய வ்ழி நாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தால் போதும் . வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழ்ந்து பார் ! வாழ்வை நேசித்துப் பார் !

விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல ! நம்மால் முடியும் வரை தூங்குவதே தூக்கம் !

குறுந் தகவல்கள்

இந்திய அரசாங்கம் 25 லட்சம் மக்களின் ஆதரவு இருந்தால் தான் லோக்பால் மசோதா சட்டமாக்கமுடியும் எனக் கூறுகிறார்கள் . எனவே எல்லோரும் 912261550789 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கவும் .மிஸ்டு கால் கொடுத்தவுடன் உங்களுக்கு ஒரு நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ் வரும் . இதை படிப்பவர்கள் உடனடியாக செயல்படுங்கள் .

Friday, May 27, 2011

பிறந்த நாள் வாழ்த்து

உணவு உலகம் எழுதும் அ.ரா.சங்கரலிங்கத்திற்கு இன்று நட்சத்திரப் பிறந்த நாள் .
நல்வாழ்துக்கள் .

Wednesday, May 4, 2011

குறுந் தகவல்கள்

மன்னிப்பு கேட்பதால் , மற்றவர் செய்தது சரி நீ செய்தது தப்பு என்று அர்த்தம் அல்ல!
ஈகோவை விட நீ உறவுகளை மதிப்பதால் மன்னிப்பு கேட்பது தப்பல்ல !

சிரிப்பு என்பது மின்சாரத்தைப் போல !
வாழ்க்கை என்பது பாட்டரியைப் போல !
எப்போது எல்லாம் நீ சிரிக்கின்றாயோ அப்பொழுது எல்லாம் உனது பாட்டரி ரீசார்ஜ் ஆகும் !
அதனால் உனது நாட்கள் அழகானது ஆகும் !
எனவே எப்பொழுது சிரித்த முகத்துடனே இருப்பாயாக !

உன் அருகில் இருப்பவர்களிடம் உண்மையான அன்பை எதிர்பார்க்காதே !
ஆனால் அவர்களுக்கு அன்பு என்றால் எப்படி இருக்கும் என்று அவர்களை
உணரச் செய் !
அவர்கள் அனுபவிக்கும்படிச் செய் !

குறுந் தகவல்கள்

எங்கே நேசம் இருக்கின்றதோ அங்கே காதல் பிறக்கும் !
எங்கே காதல் இருக்கின்றதோ அங்கே வலி இருக்கும் !
அங்கே மூவ் தடவினால் வலி பறந்து போகும் !

SMILE is not a single word ! It is a beautiful sentance !

S - speak
M - more
I - in
L - less
E - energy
so always keep in smiling !

எல் கேஜி மாணவன் மற்ற மாணவனிடம் : - சிகரெட் பிடித்தால் கேன்சர் வரும் என்று ஆசிரியர் கூறினார்டா !
மாணவன் 2 : - ஆசிரியர் உன்னை முட்டாளாக ஆக்குகிறார்டா!
சிகரெட் பிடித்தால் புகைதான் வரும் !

குறுந் தகவல்கள்

பரிட்சை முடிவைப்பார்த்து அப்பா மகனிடம் : -என்னடா மார்க் குறைய வாங்கியிருக்கிறாய் ?
மகன் அப்பாவிடம் : -விற்கிற விலைவாசியில் எதுவுமே அதிகமாக வாங்கமுடியவில்லை அப்பா !

நீ கேட்கின்ற விசயங்களில் பாதியை நம்பினால் நீ புத்திசாலி !
அனால் கேட்கின்ற விசயங்களில் எதை நம்புவது என் தீர்மானித்தால் நீ அதி புத்திசாலி !

மரனமென்பது மண்ணில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் தான்
மனதில் வாழும் என்னிடம் உள்ள உன் நினைவுகளுக்கு இல்லை !

புனிதமான இதயம் என்பது உலகத்தில் உள்ள பெரிய கோவில் !
முகத்தில் மட்டும் அன்புகாட்டுபவரை நம்பாதே !
ஆனால் இதயத்தில் அன்பு காட்டுபவரை நம்பு !
ஏனென்றால் அவர்கள் உலகத்தில் குறைவு !

எந்த நாட்களையும் குறை சொல்லாதே !
நல்ல நாட்கள் உனக்கு மகிழ்ச்சியை தரும் !
சில நாட்கள் உனக்கு துன்பத்தை தந்தாலும் ,உனக்குஎக்ஸ்பிரியன்சை தரும் !
எனவே இரு வகை நாட்களும் வாழ்க்கைக்குத் தேவை !

Monday, April 25, 2011

குறுந் தகவல்கள்

நீ தேடும் பொழுது உன் அருகில் நான் இல்லை !
நீ நினைக்கும் பொழுது உன் மனசெல்லாம் நான் இருப்பேன் !
உன் நேசம் நிசமானது என்றால் !

கப்பல் தலைவன் : - கரை தெரிகிறது , கரை தெரிகிறது
சர்தார் : - சர்ப் எக்செல் போடுங்க ! அந்த கரை இந்தக்கரை , எந்தக் கரையாக இருந்தாலும் காணாமல் போய் விடும் !

தமிழர்களின் வாழ்க்கை ஏப்ரல் 15ம் தெதிக்கு மேல் எப்படி இருக்கும் ?
அரசாங்கம் தரும் இலவச அரிசியை வாங்கி ,
இலவச கிரைண்டரில் அரைத்து ,
இலவச அடுப்பில் சமைத்து சாப்பிட்டு ,
அரசு தரும் இலவச வீட்டில் இலவச காற்றாடியில் காற்று வாங்கி,
இலவச கேபிளில் இலவச டிவியில் மகிழ்ச்சியாக பார்த்துக்கிட்டு ,
30 ஆயிரம் செலவில் இலவசமாக கல்யாணம் செய்து கிட்டு ,
10 ஆயிரத்துக்கு க்ழந்தையை பெத்துக் கிட்டு ,
இலவசமாக நோய் நொடி வாங்கி கிட்டு ,
இலவச காப்பீடு திட்டத்தில் மருத்துவம் பார்த்துக்கிட்டு ,
இலவச பேருந்தில் நாலு எடத்துக்கு இலவசமாகப் போய் வந்து ,இலவசமாக அரசு த்ரும் 1000 ரூபாய் பணத்தை வாங்கிகிட்டு சந்தோஸமாக வாழலாம் !
ஆகயால் மக்களே உங்கள் எல்லா வேலையையும் விட்டு விட்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல் சந்தோஸமாக இருங்கள் !

குறுந் தகவல்கள்

எப்போது எல்லாம் உன் இதயம் வலிக்கின்றதோ !
அப்போது எல்லாம் உன்னை நெசிக்கும் உள்ளத்திடம் பேசிப்பார் !
அவர்களின் அன்பு உன் மனதை சந்தோஸப்படச் வைக்கும் !

சிரிப்பு என்பது இதயத்தில் தோன்றி , உன் கண்களில் தெரிந்து , உனது முகத்தில் முடியும் !
நீ எப்பொழுதும் முகம் மலர்ந்த சிரிப்புடன் உன் வாழ் நாள் முழுவது இருப்பாயாக !

மனிதர்கள் சொல்வார்கள் எப்பொழுதும் நல்ல நண்பர்களைத் தேடு , கெட்ட வர்களை விட்டு விடு என்று கூறுவார்கள் !
ஆனால் நான் சொல்கின்றேன் உனது நண்பர்களில் அவர்களிடம் உள்ள நல்லகுணங்களை தேர்ந்து எடு , அவர்களிடம் உள்ள கெட்டவற்றை விட்டு விடு !
யாருமே எல்லா விசயத்திலும் நல்லவர்களாக இருக்க முடியாது !

குறுந் தகவல்கள்

இதயம் என்பது துன்பத்தையும் டென்சனையும் வைக்கும் கூடை அல்ல் .!
அது மகிழ்ச்சியையும் ரோஜாப்பூக்களையும் வைக்கும் தங்கத்தினால் ஆன கூடை !
எனவே உந்து இதயத்த்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே வைத்திரு !

தங்கும் இடம் இலவசம் , படிப்பு இலவசம் - ஊனமுற்ற குழந்தகளுக்கு !
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 1) 9842062501 - 2 )9894067506

மற்றவர்களின் சந்தோசத்தை எழுதும் பென்சிலாக இல்லாவிட்டாலும் கூட மற்றவர்களின் துயரத்தை துடைக்கும் ரப்பராக இருப்பாயாக !

தொட்டுப் பார்கலாம் மலரை
தொடாமல் பார்த்து ரசிக்கலாம் நிலவை
தொட்டும் தொடாமலும் ரசிப்போம் இனிய கனவை !

Wednesday, April 20, 2011

குறுந் தகவல்கள்

நீ யார் மேலாவது அதிகம் அன்பு செலுத்துவதை உணர முடியாது !
ஆனால் எந்த மனிதன் உன்னைவிட்டுப் போகும் பொழுது நீ கண்ணீர் விடுகின்றாயோ அந்த மனிதனே நீஅதிகம் அன்பு செலுத்துபவர் !

நடக்கும் கால்களிடமிருந்து நிறைய படிக்கவேண்டியது உள்ளது .
நடக்கும் பொழுது முன் உள்ள கால் கர்வப்படுவதும் இல்லை !
அது போல் நடக்கும் பொழுது பின் உள்ள கால் வெட்கப்படுவதும் இல்லை !ஏனெனில் இரு கால்களும் தங்களைப்பற்றி நன்கு அறிந்துள்ளன்

குறுந் தகவல்கள்

உரிமை உள்ள உறவுகள் மெளனமாக இருந்தால்
உயிர் கொண்ட உறவுகள் கண்ணீர் விடும்

நி ஒருவரை தண்டிக்க நினைத்தால் சிந்தித்து செயல்படு !
ஒருவரை மன்னிக்க நினைத்தால் உடனே மன்னித்து விடு .

ஆசிரியர் மாணவனிடம் : - பாரு அந்த பெண் 90 மார்க் வாங்கியிருக்கா , அவளைப் பார்த்தாவது ஒழுங்காகப் படிடா

மாணவன் :- அட போங்க சார் , அவளைப் பார்த்து பார்த்து தான் பெயில் ஆனேன் .

ஒரு இதயம் துடிக்கும் பொழுது யாரும் கவனிக்காமல் இருப்பார்கள் . ஆனால் இதயம் துடிப்பது நின்ற பின் எல்லோரும் துடிப்பார்கள் !
இது தான் வாழ்க்கை !
எனவே உனக்காகவே துடிக்கும் இதயத்தை நேசி !

குறுந் தகவல்கள்

wief , lover , friend - what is the meaning for this ?

w - without
i - information
f -fighting
e - everytime

l - loss
o - of
v - valuable
e - energy
r - rupees

f - first
r - relationship
i - in
e - earth that
n - never
d - die

உலகம் நமக்கு பல அழகிய நண்பர்களைத்தரும் ஆனால் உண்மையான நண்பர்கள் மட்டுமே அழகிய உலகத்தை கொடுக்கமுடியும் .

இயற்கை நமக்கு முகத்தில் இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ வெளியிடும் அதிசயத்தை கொடுத்துள்ளது . முகத்தில் இன்பத்தையோ துன்பத்தையோ வெறுப்பையோ வெளியிடும் பொழுது கவனமாக வெளியிட வேண்டும் . ஏனென்றால் அது மற்றவர்களின் இதயத்தைப் பாதிக்கும் .

நினைவில் வைத்து கனவில் காண்பது அல்ல் அன்பு
மனதில் வைத்து மரணம் வரை தொடர்வது தான் உண்மையான அன்பு .

மரணம் என்பது மண்ணில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் தான்
மனதில் வாழும் என்னிடம் உள்ள உன் நினைவுக்கு இல்லை .

Wednesday, April 13, 2011

குறுந் தகவல்கள்

message ? - என்றால் என்ன அர்த்தம் தெரியுமா ?
m - மனசுல
e - இருக்கிற
s - சந்தோஸம்
s - சோகம்
a - அனுபவம்
g - கலாட்டா
e -எல்லாத்தையும்
சொல்லுறது

நான் உன்னுடைய இதயம் அல்ல,!
ஆனால் நான் உன்னை இழக்கின்றேன்.!
நான் உன்னுடைய குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல !
, ஆனால் நான் உனது நலத்தை விரும்புகின்றேன்.
நான் உனது ரத்த சம்பந்தம் இல்லாதவன் ஆனாலும் நான் உனது வலியை என்னிடம் சொல்லலாம்,
ஏனென்றால் நான் உனது நலம் விரும்பும் நண்பன் .

நாம் வாழ்வதற்கு நிறைய நாட்கள் , நேரங்களும் இருப்பதாக நினைக்கின்றோம்.
ஆனால் நமது முடிவு எப்பொழுது என்று நமக்குத் தெரிவதில்லை . ஆகையால் எல்லாத்தையும் பகிர்ந்து கொள் !
நல்லதே செய் !

Tuesday, April 12, 2011

குறுந் தகவல்கள்

நாம் இந்த உலகத்திற்கு வரும் பொழுது யாரையும் நமக்குத் தெரியாது என்ற பயத்துடனே வருகிறோம் !
ஆனால் இந்த உலகத்தை விட்டு போகும் பொழுது தெரிந்த எல்லோரையும் கண்ணீர் விட்டு அழ வைத்து விட்டுச் செல்கின்ரோம் !

பத்திரிக்கையாளர் : - கருனானிதியிடம் உலக கோப்பையை வென்றதைப் பற்றி என்ன நினைக்கிறேர்கள் ?

கருனாநிதி : - எங்கள் பொன்னான ஆட்சியில் பல சாதனைகள் செய்து உள்ளோம் . அதில் உலக கோப்பை எங்கள் ஆட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி !
ஆகையால் எங்களுக்கே உங்க்ள் ஒட்டைப் போடுங்கள் !
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

குறுந் தகவல்கள்

உன் மனம் வலிக்கும் பொழுது சிரி !
பிறர் மனம் வலிக்கும் பொழுது அவர்களை சிரிக்க வை !

ஒரு குழந்தையின் சிரிப்பில் கடவுளைப் பார்க்கலாம் !

உனது திறமை உன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் !
ஆனால் உனது நன் நடத்தை உயர்ந்த நிலையில் தொடர்ந்து இருப்பதற்கு உதவி செய்யும் !
எல்லோரின் இதயத்திலும் இடம் பிடி !

தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்ப்பதில்லை !
தன் மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் ஜெயிப்பது இல்லை

ஒன்றுமே எழுதாத பேப்பருக்கு மதிப்பு கிடையாது !
ஆனால் அதில் ஏதேனும் எழுதினால் அது விலை மதிக்க முடியாத பத்திரம் போல் ஆகிவிடும் !
வாழ்க்கையும் அதுபோல் தான் ! நாம் தான் எது போல் ஆகவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும் !

Friday, April 8, 2011

குறுந் தகவல்கள்

மகன் : -அப்பா நீச்சல் குளம் கட்ட நன்கொடை கேட்டு வந்திருக்காங்கள் என்ன செய்ய ?
அப்பா : - அப்படியா ! ஒரு சொம்பு தண்ணி கொடுத்து அனுப்பு .!

உன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றாதே ! ஆனால் உன்னுடைய நடத்தையை மாற்றிக்கொள் மற்றவர்களுக்காக!

அனுகுண்டு : - எல்லா கண்டுபிடிப்புகளையும் அழிக்கும் ஒரு கண்டு பிடிப்பு .!

முதலாளி : - நாம் நேரங்கழித்து வந்தால் நமக்கு முன்பே வருபவர் . நாம் விரைவில் வந்தால் நேரங்கழித்து வருபவர் .

காதல் : - கல்யாணம் வரை மகிழ்ச்சியாக இருப்பது !

இமைகள் திறந்து நேசிப்பதை விட இதயம் திறந்து நேசித்துப் பார் .!
உயிர் பிரிந்தாலும் உறவுகள் நிலைக்கும் !

அன்பு என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கலாம் !
ஆனால் ந்ட்பு என்ற சொல்லுக்கு நீ மட்டுமே அடையாள்ம் !

Wednesday, April 6, 2011

இன்றைய பஞ்ச்

தமிழ் நாட்டில் இண்டெர் நெட் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி இன்று முதல் அமலில் உள்ளது . ஆனால் கணிணியை துவக்குவதற்கு மின்வசதி இல்லை . கரண்ட் கட் .என்ன கொடுமை இது . யோசித்து ஒட்டுப் போடுங்கள்

உன் மெளனத்தில் உள்ள வார்த்தைகளையும் , உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்ட உறவுகள் !

எல்லோரும் ரோஜாப் பூவின் மேல் அன்பு செலுத்துவர் . ஆனால் ரோஜாப்பூவுடன் இருக்கும் இலையின் மேல் யாரும் அன்பு செலுத்துதில்லை .!

Tuesday, April 5, 2011

முட்டாள்கள் தினம் .

ஏப்ரல் 1 ம் தேதி ஏமாந்தால் அன்று மட்டும் தான் ஏப்ரல் பூல் !
ஆனால் ஏப்ரல் 13 ம் தேதி ஏமாந்தால் 5 வருடங்கள் முட்டாளகவே இருக்க வேண்டும் .
எனவே யோசித்து ஒட்டுப் போடுங்கள் !

காலை

அழகான காலைப் பொழுது ! சூடான காப்பி ! நல்ல குளியல் !கொஞ்சம் சோம்பல் !

குட்டி s m s ! காலை வணக்கம் !

நீ தேடிப் போகும் அன்பு அழகானது ! உன்னைப்போல !

உன்னைத் தேடி வரும் அன்பு உண்மையானது ! என்னைப் போல !

நீ சந்தோஸமாக இருக்க முடிவு செய்து நினைத்தால் உன்னை ஒருவரும் கவலைப்பட வைக்க முடியாது ! அதே போல் நீ கவலையாக இருக்க முடிவு செய்து
நினைத்தால் உன்னை ஒருவரும் சந்தோஸப்படுத்த முடியாது !
எல்லாமே உன்னிடத்தில் தான் இருக்கிறது .


Friday, April 1, 2011

திருமண சடங்குகள் - 6

மணவறையில் திருமணச்சடங்கு விபரம் : -

வினாயகர் முதலிய தெய்வவழிபாடு செய்ய வேண்டும் .

மணச்சடங்கிற்கு தேவையான பொருட்கள் : -

குத்து விளக்கு 1, நிறை நாழி 1 , சூடன் தட்டு , தூபக்கால் , தீபக்கால் ,பத்தி , மணி ,
பஞ்சபாத்திரம் , பத்தி ஸ்டாண்டு ,, கும்பக்குடம் 1 , பித்தளைக்குடம் 1 , செம்பு 4 , நூல்கண்டு (10 ம் நீர் ) 4 , கும்பவேட்டி 5 ( சிகப்பு 1 , பச்சை 1 , வெள்ளை 3 ஒவ்வொரு நிறத்திலும் 73 செ.மீ. அளவில் துணி , முக்காலி 1 , அரசாணிக்கால் கம்பு 1 + 1அடி நீளம் மாங்கால் கொப்பு 1 , அரிசிமாவு 200 கிராம் , தீப்பெட்டி 2 ,
பூலாங்கிழங்கு , செண்பகமொட்டு , கஸ்தூரி மஞ்சள் (எல்லாம் சேர்த்து 100 கிராம் ),கும்பத்திற்கு, ஒமச்சட்டி , பச்சை நெல் உமி 1 படி ,கை கட்டுவதற்குச் சிகப்புப் பட்டு , பச்சரிசி 3 கிலோ , நெல் 2 கிலோ , உளுந்து 200 கிராம் , அடை பொரி , ஆச்சாரியார் வஸ்திரம் ( அரை வேட்டி ,மேல் வேட்டி ) , பஞ்ச கவ்யம் , பால் 200 , விரலி மஞ்சள் 50 கிராம் , மஞ்சள் பொடி 50 கிராம் , குங்குமம் 50 கிராம் , விபூதி பாக்கெட் 1 , சூடன் 20 கிராம் ,சாம்பிராணி 25 கிராம் ,பத்தி பாக்கெட் 1 ,சந்தனம் , தேங்காய் 11 ,( அரசாணி ,ஊஞ்சள் , திருப்பூட்டு முதலியவற்றிற்கு ) , கதலி பழம் 25 , வெற்றிலைக் கட்டு 1 ,எலுமிச்சம் பழம் 2, வாழையிலை 15 , மாவிலைக் கொத்து , விடுபூ ( உதிரிப்பூக்கள் ) , விடு ஆரம் 9 , பூச்சரப்பந்து 1 , அச்சு வெல்லம் 50 கிராம் , களிப்பாக்கு 50 கிராம் , கற்கண்டு 50 கிராம் , நெய் 50 கிராம் , தயிர் 100 கிராம் , கோசல்ம் , கோமேயம் ( பசுஞ்சாணம் ), சமித்து , தர்ப்பை , நாற்காலி 2 , சில்லறை நாணயம் , முளைப்பாலிகை மண்கிண்ணம் 9 , நவதானியம் ( திருமணத்திற்கு முன் தினம் ஊற வைக்கவேண்டும் .) . நவதானியங்கள் 1 ) நெல் 2 ) கோதுமை , 3) துவரை , 4) பச்சைப்பயறு , 5) கடலை , 6)மொச்சை , 7) எள்ளு , 8) உளுந்து , 9) கொள்ளு

மணமகன் பெற்றோருடன் சடங்கு : -

புனித நீர் , பஞ்சகவ்வியம் , திருனீறு பெற்று வழிபாடு .
மணமகன் தன் தந்தையாருடன் நாட்கால் ( கப்பு வைத்த மாங்கால் ) பூசை செய்து , கன்னி மூலையில் கட்டிப் பால் ஊற்ற வேண்டும் .

மணமகன் தாய் மாமனார்ருடன் சடங்கு : -

மணமகன் வலக்கையில் காப்புக்கட்டுதல் (மஞ்சள் துண்டு , வெற்றிலை ,தடைவகைக்குஇரும்பு( சிறிய துண்டு) இவற்றை ம்ஞ்சள் கயிற்றில் முடிந்து கட்டுதல் )
தாம்பாளத்தில் உள்ள அரிசியை இரு கைகளாலும் இரு முறை அள்ளிப்போட்டு மூன்றாம் மூறை கையில் வைத்துக் கொண்டு , அதன் மேல் வெற்றிலை , பாக்கு , பழம் 2 , தேங்காய் வைக்கவேண்டும் மாப்பளளையின் வலக்கையில் மஞ்சள் முடிந்த காப்புக் கயிற்றை தாய்மாமனார் கட்டவேண்டும்

முளைப்பாலிகை ( முளை தெளித்தல் ): - ஊற வைத்த நவதானியத்தை சிறிய பெண் குழந்தையின் மூலமாக மாப்பிள்ளையின் தாய்மாமனாரிடம் கொடுத்து, தாய்மாமனார் மாப்பிள்ளையின் கையில் கொடுத்து, முளைப்பாலிகையில் 5 அல்லது 7 ல் ) வைக்கவேண்டும் . பின் அவற்றிற்குப் பால் , சந்தனம் , குங்குமம் , பூ முதலியன இட்டு பூசை செய்ய வேண்டும் . சிறுமிக்கு சந்தனம் , குங்குமம் , பூ கொடுத்து பழம் வெற்றிலை பணம் முதலியன கொடுத்து சிறப்புச்செய்யவேண்டும் .

பின் மணமகனுக்கு ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் தடவிய தேங்காய் , வெற்றிலை , பாக்கு , பழங்கள் , இவற்றுடன் முகூர்ததத்திற்கு உரிய புத்தாடையை வைத்து , முகூர்த்த மாலைகளுடன் வழங்கவேண்டும் .
இது போல் மணப்பெண்ணிற்கும் அவளது பெற்றோருடன் சடங்கு , தாய் மாமனாருடன் சடங்கு செய்து . காப்புக்கட்டி முலைப்பாலிகை இட்டு செய்ய வேண்டும் .
மணமகளுக்கும் அது போல் புத்தாடை வழங்க வேண்டும் .

மாங்கல்ய வழிபாடு : - மாங்கல்யத்திற்கு அபிசேகம் பூசை செய்து ஒரு தாம்பாளத்தில் தேங்காய் ( மஞ்சள் பூசியது ) , வெற்றிலை , பாக்கு , பழங்கள் , விரலி மஞ்சள் , பூக்களுடன் மாங்கல்யம் வைக்கப்பட்ட குங்குமச் செப்பினையும் வைத்துப் பெரியவர்களிடம் ஆசி பெறச் செய்ய வேண்டும் .

முதலில் மணமகனை முகூர்த்த ஆடை மாலைகளுடன் அலங்கரித்து அழைத்து வந்து மணவறைக்கு எதிரே இடப்பட்ட நாற்காலியில் மேற்கு முகமாக அமரச்செய்ய வேண்டும் .பின் மணமகளை முகூர்த்த ஆடை மாலைகளுடன் அழைத்து வந்து மணமேடைக்கு மேல்புறம் கிழக்கு முகமாக இடப்பட்ட நாற்காலியில் மணமகனுக்கு எதிரே உட்காரச் செய்ய வேண்டும் .

Thursday, March 31, 2011

சனிக்கிழமை 2 ஏப்ரல் 1983 இந்தியா உலககோப்பையை வென்ற நாள்.
சனிக்கிழமை 2 ஏப்ரல் 2011--------------
1983 &2011 காலண்டர் ஒரே மாதிரியாக உள்ளது.
சரிபார்க்க .

ரிக்கி பாண்டிங் & அப்ரிடி பார் செல்லும் வழியில் ரிக்கி வா மச்சான் சரக்கு அடிக்கலாம்
அப்ரிடி அட இரு மாப்பிள்ளே சங்கரா வரட்டும் எல்லோரும் ஒன்னா அடிக்கலாம்.

Wednesday, January 19, 2011

பாரம்பரிய நடைமுறைகள்

நமது பரம்பரை பழக்கங்கள் பற்றி குழந்தை பிறந்தது முதல் என்ன என்ன செய்யவேண்டும் என்று இதில் சொல்ல விரும்புகின்றேன்