Follow by Email

Monday, April 25, 2011

குறுந் தகவல்கள்

நீ தேடும் பொழுது உன் அருகில் நான் இல்லை !
நீ நினைக்கும் பொழுது உன் மனசெல்லாம் நான் இருப்பேன் !
உன் நேசம் நிசமானது என்றால் !

கப்பல் தலைவன் : - கரை தெரிகிறது , கரை தெரிகிறது
சர்தார் : - சர்ப் எக்செல் போடுங்க ! அந்த கரை இந்தக்கரை , எந்தக் கரையாக இருந்தாலும் காணாமல் போய் விடும் !

தமிழர்களின் வாழ்க்கை ஏப்ரல் 15ம் தெதிக்கு மேல் எப்படி இருக்கும் ?
அரசாங்கம் தரும் இலவச அரிசியை வாங்கி ,
இலவச கிரைண்டரில் அரைத்து ,
இலவச அடுப்பில் சமைத்து சாப்பிட்டு ,
அரசு தரும் இலவச வீட்டில் இலவச காற்றாடியில் காற்று வாங்கி,
இலவச கேபிளில் இலவச டிவியில் மகிழ்ச்சியாக பார்த்துக்கிட்டு ,
30 ஆயிரம் செலவில் இலவசமாக கல்யாணம் செய்து கிட்டு ,
10 ஆயிரத்துக்கு க்ழந்தையை பெத்துக் கிட்டு ,
இலவசமாக நோய் நொடி வாங்கி கிட்டு ,
இலவச காப்பீடு திட்டத்தில் மருத்துவம் பார்த்துக்கிட்டு ,
இலவச பேருந்தில் நாலு எடத்துக்கு இலவசமாகப் போய் வந்து ,இலவசமாக அரசு த்ரும் 1000 ரூபாய் பணத்தை வாங்கிகிட்டு சந்தோஸமாக வாழலாம் !
ஆகயால் மக்களே உங்கள் எல்லா வேலையையும் விட்டு விட்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல் சந்தோஸமாக இருங்கள் !

குறுந் தகவல்கள்

எப்போது எல்லாம் உன் இதயம் வலிக்கின்றதோ !
அப்போது எல்லாம் உன்னை நெசிக்கும் உள்ளத்திடம் பேசிப்பார் !
அவர்களின் அன்பு உன் மனதை சந்தோஸப்படச் வைக்கும் !

சிரிப்பு என்பது இதயத்தில் தோன்றி , உன் கண்களில் தெரிந்து , உனது முகத்தில் முடியும் !
நீ எப்பொழுதும் முகம் மலர்ந்த சிரிப்புடன் உன் வாழ் நாள் முழுவது இருப்பாயாக !

மனிதர்கள் சொல்வார்கள் எப்பொழுதும் நல்ல நண்பர்களைத் தேடு , கெட்ட வர்களை விட்டு விடு என்று கூறுவார்கள் !
ஆனால் நான் சொல்கின்றேன் உனது நண்பர்களில் அவர்களிடம் உள்ள நல்லகுணங்களை தேர்ந்து எடு , அவர்களிடம் உள்ள கெட்டவற்றை விட்டு விடு !
யாருமே எல்லா விசயத்திலும் நல்லவர்களாக இருக்க முடியாது !

குறுந் தகவல்கள்

இதயம் என்பது துன்பத்தையும் டென்சனையும் வைக்கும் கூடை அல்ல் .!
அது மகிழ்ச்சியையும் ரோஜாப்பூக்களையும் வைக்கும் தங்கத்தினால் ஆன கூடை !
எனவே உந்து இதயத்த்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே வைத்திரு !

தங்கும் இடம் இலவசம் , படிப்பு இலவசம் - ஊனமுற்ற குழந்தகளுக்கு !
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 1) 9842062501 - 2 )9894067506

மற்றவர்களின் சந்தோசத்தை எழுதும் பென்சிலாக இல்லாவிட்டாலும் கூட மற்றவர்களின் துயரத்தை துடைக்கும் ரப்பராக இருப்பாயாக !

தொட்டுப் பார்கலாம் மலரை
தொடாமல் பார்த்து ரசிக்கலாம் நிலவை
தொட்டும் தொடாமலும் ரசிப்போம் இனிய கனவை !

Wednesday, April 20, 2011

குறுந் தகவல்கள்

நீ யார் மேலாவது அதிகம் அன்பு செலுத்துவதை உணர முடியாது !
ஆனால் எந்த மனிதன் உன்னைவிட்டுப் போகும் பொழுது நீ கண்ணீர் விடுகின்றாயோ அந்த மனிதனே நீஅதிகம் அன்பு செலுத்துபவர் !

நடக்கும் கால்களிடமிருந்து நிறைய படிக்கவேண்டியது உள்ளது .
நடக்கும் பொழுது முன் உள்ள கால் கர்வப்படுவதும் இல்லை !
அது போல் நடக்கும் பொழுது பின் உள்ள கால் வெட்கப்படுவதும் இல்லை !ஏனெனில் இரு கால்களும் தங்களைப்பற்றி நன்கு அறிந்துள்ளன்

குறுந் தகவல்கள்

உரிமை உள்ள உறவுகள் மெளனமாக இருந்தால்
உயிர் கொண்ட உறவுகள் கண்ணீர் விடும்

நி ஒருவரை தண்டிக்க நினைத்தால் சிந்தித்து செயல்படு !
ஒருவரை மன்னிக்க நினைத்தால் உடனே மன்னித்து விடு .

ஆசிரியர் மாணவனிடம் : - பாரு அந்த பெண் 90 மார்க் வாங்கியிருக்கா , அவளைப் பார்த்தாவது ஒழுங்காகப் படிடா

மாணவன் :- அட போங்க சார் , அவளைப் பார்த்து பார்த்து தான் பெயில் ஆனேன் .

ஒரு இதயம் துடிக்கும் பொழுது யாரும் கவனிக்காமல் இருப்பார்கள் . ஆனால் இதயம் துடிப்பது நின்ற பின் எல்லோரும் துடிப்பார்கள் !
இது தான் வாழ்க்கை !
எனவே உனக்காகவே துடிக்கும் இதயத்தை நேசி !

குறுந் தகவல்கள்

wief , lover , friend - what is the meaning for this ?

w - without
i - information
f -fighting
e - everytime

l - loss
o - of
v - valuable
e - energy
r - rupees

f - first
r - relationship
i - in
e - earth that
n - never
d - die

உலகம் நமக்கு பல அழகிய நண்பர்களைத்தரும் ஆனால் உண்மையான நண்பர்கள் மட்டுமே அழகிய உலகத்தை கொடுக்கமுடியும் .

இயற்கை நமக்கு முகத்தில் இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ வெளியிடும் அதிசயத்தை கொடுத்துள்ளது . முகத்தில் இன்பத்தையோ துன்பத்தையோ வெறுப்பையோ வெளியிடும் பொழுது கவனமாக வெளியிட வேண்டும் . ஏனென்றால் அது மற்றவர்களின் இதயத்தைப் பாதிக்கும் .

நினைவில் வைத்து கனவில் காண்பது அல்ல் அன்பு
மனதில் வைத்து மரணம் வரை தொடர்வது தான் உண்மையான அன்பு .

மரணம் என்பது மண்ணில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் தான்
மனதில் வாழும் என்னிடம் உள்ள உன் நினைவுக்கு இல்லை .

Wednesday, April 13, 2011

குறுந் தகவல்கள்

message ? - என்றால் என்ன அர்த்தம் தெரியுமா ?
m - மனசுல
e - இருக்கிற
s - சந்தோஸம்
s - சோகம்
a - அனுபவம்
g - கலாட்டா
e -எல்லாத்தையும்
சொல்லுறது

நான் உன்னுடைய இதயம் அல்ல,!
ஆனால் நான் உன்னை இழக்கின்றேன்.!
நான் உன்னுடைய குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல !
, ஆனால் நான் உனது நலத்தை விரும்புகின்றேன்.
நான் உனது ரத்த சம்பந்தம் இல்லாதவன் ஆனாலும் நான் உனது வலியை என்னிடம் சொல்லலாம்,
ஏனென்றால் நான் உனது நலம் விரும்பும் நண்பன் .

நாம் வாழ்வதற்கு நிறைய நாட்கள் , நேரங்களும் இருப்பதாக நினைக்கின்றோம்.
ஆனால் நமது முடிவு எப்பொழுது என்று நமக்குத் தெரிவதில்லை . ஆகையால் எல்லாத்தையும் பகிர்ந்து கொள் !
நல்லதே செய் !

Tuesday, April 12, 2011

குறுந் தகவல்கள்

நாம் இந்த உலகத்திற்கு வரும் பொழுது யாரையும் நமக்குத் தெரியாது என்ற பயத்துடனே வருகிறோம் !
ஆனால் இந்த உலகத்தை விட்டு போகும் பொழுது தெரிந்த எல்லோரையும் கண்ணீர் விட்டு அழ வைத்து விட்டுச் செல்கின்ரோம் !

பத்திரிக்கையாளர் : - கருனானிதியிடம் உலக கோப்பையை வென்றதைப் பற்றி என்ன நினைக்கிறேர்கள் ?

கருனாநிதி : - எங்கள் பொன்னான ஆட்சியில் பல சாதனைகள் செய்து உள்ளோம் . அதில் உலக கோப்பை எங்கள் ஆட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி !
ஆகையால் எங்களுக்கே உங்க்ள் ஒட்டைப் போடுங்கள் !
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

குறுந் தகவல்கள்

உன் மனம் வலிக்கும் பொழுது சிரி !
பிறர் மனம் வலிக்கும் பொழுது அவர்களை சிரிக்க வை !

ஒரு குழந்தையின் சிரிப்பில் கடவுளைப் பார்க்கலாம் !

உனது திறமை உன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் !
ஆனால் உனது நன் நடத்தை உயர்ந்த நிலையில் தொடர்ந்து இருப்பதற்கு உதவி செய்யும் !
எல்லோரின் இதயத்திலும் இடம் பிடி !

தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்ப்பதில்லை !
தன் மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் ஜெயிப்பது இல்லை

ஒன்றுமே எழுதாத பேப்பருக்கு மதிப்பு கிடையாது !
ஆனால் அதில் ஏதேனும் எழுதினால் அது விலை மதிக்க முடியாத பத்திரம் போல் ஆகிவிடும் !
வாழ்க்கையும் அதுபோல் தான் ! நாம் தான் எது போல் ஆகவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும் !

Friday, April 8, 2011

குறுந் தகவல்கள்

மகன் : -அப்பா நீச்சல் குளம் கட்ட நன்கொடை கேட்டு வந்திருக்காங்கள் என்ன செய்ய ?
அப்பா : - அப்படியா ! ஒரு சொம்பு தண்ணி கொடுத்து அனுப்பு .!

உன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றாதே ! ஆனால் உன்னுடைய நடத்தையை மாற்றிக்கொள் மற்றவர்களுக்காக!

அனுகுண்டு : - எல்லா கண்டுபிடிப்புகளையும் அழிக்கும் ஒரு கண்டு பிடிப்பு .!

முதலாளி : - நாம் நேரங்கழித்து வந்தால் நமக்கு முன்பே வருபவர் . நாம் விரைவில் வந்தால் நேரங்கழித்து வருபவர் .

காதல் : - கல்யாணம் வரை மகிழ்ச்சியாக இருப்பது !

இமைகள் திறந்து நேசிப்பதை விட இதயம் திறந்து நேசித்துப் பார் .!
உயிர் பிரிந்தாலும் உறவுகள் நிலைக்கும் !

அன்பு என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கலாம் !
ஆனால் ந்ட்பு என்ற சொல்லுக்கு நீ மட்டுமே அடையாள்ம் !

Wednesday, April 6, 2011

இன்றைய பஞ்ச்

தமிழ் நாட்டில் இண்டெர் நெட் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி இன்று முதல் அமலில் உள்ளது . ஆனால் கணிணியை துவக்குவதற்கு மின்வசதி இல்லை . கரண்ட் கட் .என்ன கொடுமை இது . யோசித்து ஒட்டுப் போடுங்கள்

உன் மெளனத்தில் உள்ள வார்த்தைகளையும் , உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்ட உறவுகள் !

எல்லோரும் ரோஜாப் பூவின் மேல் அன்பு செலுத்துவர் . ஆனால் ரோஜாப்பூவுடன் இருக்கும் இலையின் மேல் யாரும் அன்பு செலுத்துதில்லை .!

Tuesday, April 5, 2011

முட்டாள்கள் தினம் .

ஏப்ரல் 1 ம் தேதி ஏமாந்தால் அன்று மட்டும் தான் ஏப்ரல் பூல் !
ஆனால் ஏப்ரல் 13 ம் தேதி ஏமாந்தால் 5 வருடங்கள் முட்டாளகவே இருக்க வேண்டும் .
எனவே யோசித்து ஒட்டுப் போடுங்கள் !

காலை

அழகான காலைப் பொழுது ! சூடான காப்பி ! நல்ல குளியல் !கொஞ்சம் சோம்பல் !

குட்டி s m s ! காலை வணக்கம் !

நீ தேடிப் போகும் அன்பு அழகானது ! உன்னைப்போல !

உன்னைத் தேடி வரும் அன்பு உண்மையானது ! என்னைப் போல !

நீ சந்தோஸமாக இருக்க முடிவு செய்து நினைத்தால் உன்னை ஒருவரும் கவலைப்பட வைக்க முடியாது ! அதே போல் நீ கவலையாக இருக்க முடிவு செய்து
நினைத்தால் உன்னை ஒருவரும் சந்தோஸப்படுத்த முடியாது !
எல்லாமே உன்னிடத்தில் தான் இருக்கிறது .


Friday, April 1, 2011

திருமண சடங்குகள் - 6

மணவறையில் திருமணச்சடங்கு விபரம் : -

வினாயகர் முதலிய தெய்வவழிபாடு செய்ய வேண்டும் .

மணச்சடங்கிற்கு தேவையான பொருட்கள் : -

குத்து விளக்கு 1, நிறை நாழி 1 , சூடன் தட்டு , தூபக்கால் , தீபக்கால் ,பத்தி , மணி ,
பஞ்சபாத்திரம் , பத்தி ஸ்டாண்டு ,, கும்பக்குடம் 1 , பித்தளைக்குடம் 1 , செம்பு 4 , நூல்கண்டு (10 ம் நீர் ) 4 , கும்பவேட்டி 5 ( சிகப்பு 1 , பச்சை 1 , வெள்ளை 3 ஒவ்வொரு நிறத்திலும் 73 செ.மீ. அளவில் துணி , முக்காலி 1 , அரசாணிக்கால் கம்பு 1 + 1அடி நீளம் மாங்கால் கொப்பு 1 , அரிசிமாவு 200 கிராம் , தீப்பெட்டி 2 ,
பூலாங்கிழங்கு , செண்பகமொட்டு , கஸ்தூரி மஞ்சள் (எல்லாம் சேர்த்து 100 கிராம் ),கும்பத்திற்கு, ஒமச்சட்டி , பச்சை நெல் உமி 1 படி ,கை கட்டுவதற்குச் சிகப்புப் பட்டு , பச்சரிசி 3 கிலோ , நெல் 2 கிலோ , உளுந்து 200 கிராம் , அடை பொரி , ஆச்சாரியார் வஸ்திரம் ( அரை வேட்டி ,மேல் வேட்டி ) , பஞ்ச கவ்யம் , பால் 200 , விரலி மஞ்சள் 50 கிராம் , மஞ்சள் பொடி 50 கிராம் , குங்குமம் 50 கிராம் , விபூதி பாக்கெட் 1 , சூடன் 20 கிராம் ,சாம்பிராணி 25 கிராம் ,பத்தி பாக்கெட் 1 ,சந்தனம் , தேங்காய் 11 ,( அரசாணி ,ஊஞ்சள் , திருப்பூட்டு முதலியவற்றிற்கு ) , கதலி பழம் 25 , வெற்றிலைக் கட்டு 1 ,எலுமிச்சம் பழம் 2, வாழையிலை 15 , மாவிலைக் கொத்து , விடுபூ ( உதிரிப்பூக்கள் ) , விடு ஆரம் 9 , பூச்சரப்பந்து 1 , அச்சு வெல்லம் 50 கிராம் , களிப்பாக்கு 50 கிராம் , கற்கண்டு 50 கிராம் , நெய் 50 கிராம் , தயிர் 100 கிராம் , கோசல்ம் , கோமேயம் ( பசுஞ்சாணம் ), சமித்து , தர்ப்பை , நாற்காலி 2 , சில்லறை நாணயம் , முளைப்பாலிகை மண்கிண்ணம் 9 , நவதானியம் ( திருமணத்திற்கு முன் தினம் ஊற வைக்கவேண்டும் .) . நவதானியங்கள் 1 ) நெல் 2 ) கோதுமை , 3) துவரை , 4) பச்சைப்பயறு , 5) கடலை , 6)மொச்சை , 7) எள்ளு , 8) உளுந்து , 9) கொள்ளு

மணமகன் பெற்றோருடன் சடங்கு : -

புனித நீர் , பஞ்சகவ்வியம் , திருனீறு பெற்று வழிபாடு .
மணமகன் தன் தந்தையாருடன் நாட்கால் ( கப்பு வைத்த மாங்கால் ) பூசை செய்து , கன்னி மூலையில் கட்டிப் பால் ஊற்ற வேண்டும் .

மணமகன் தாய் மாமனார்ருடன் சடங்கு : -

மணமகன் வலக்கையில் காப்புக்கட்டுதல் (மஞ்சள் துண்டு , வெற்றிலை ,தடைவகைக்குஇரும்பு( சிறிய துண்டு) இவற்றை ம்ஞ்சள் கயிற்றில் முடிந்து கட்டுதல் )
தாம்பாளத்தில் உள்ள அரிசியை இரு கைகளாலும் இரு முறை அள்ளிப்போட்டு மூன்றாம் மூறை கையில் வைத்துக் கொண்டு , அதன் மேல் வெற்றிலை , பாக்கு , பழம் 2 , தேங்காய் வைக்கவேண்டும் மாப்பளளையின் வலக்கையில் மஞ்சள் முடிந்த காப்புக் கயிற்றை தாய்மாமனார் கட்டவேண்டும்

முளைப்பாலிகை ( முளை தெளித்தல் ): - ஊற வைத்த நவதானியத்தை சிறிய பெண் குழந்தையின் மூலமாக மாப்பிள்ளையின் தாய்மாமனாரிடம் கொடுத்து, தாய்மாமனார் மாப்பிள்ளையின் கையில் கொடுத்து, முளைப்பாலிகையில் 5 அல்லது 7 ல் ) வைக்கவேண்டும் . பின் அவற்றிற்குப் பால் , சந்தனம் , குங்குமம் , பூ முதலியன இட்டு பூசை செய்ய வேண்டும் . சிறுமிக்கு சந்தனம் , குங்குமம் , பூ கொடுத்து பழம் வெற்றிலை பணம் முதலியன கொடுத்து சிறப்புச்செய்யவேண்டும் .

பின் மணமகனுக்கு ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் தடவிய தேங்காய் , வெற்றிலை , பாக்கு , பழங்கள் , இவற்றுடன் முகூர்ததத்திற்கு உரிய புத்தாடையை வைத்து , முகூர்த்த மாலைகளுடன் வழங்கவேண்டும் .
இது போல் மணப்பெண்ணிற்கும் அவளது பெற்றோருடன் சடங்கு , தாய் மாமனாருடன் சடங்கு செய்து . காப்புக்கட்டி முலைப்பாலிகை இட்டு செய்ய வேண்டும் .
மணமகளுக்கும் அது போல் புத்தாடை வழங்க வேண்டும் .

மாங்கல்ய வழிபாடு : - மாங்கல்யத்திற்கு அபிசேகம் பூசை செய்து ஒரு தாம்பாளத்தில் தேங்காய் ( மஞ்சள் பூசியது ) , வெற்றிலை , பாக்கு , பழங்கள் , விரலி மஞ்சள் , பூக்களுடன் மாங்கல்யம் வைக்கப்பட்ட குங்குமச் செப்பினையும் வைத்துப் பெரியவர்களிடம் ஆசி பெறச் செய்ய வேண்டும் .

முதலில் மணமகனை முகூர்த்த ஆடை மாலைகளுடன் அலங்கரித்து அழைத்து வந்து மணவறைக்கு எதிரே இடப்பட்ட நாற்காலியில் மேற்கு முகமாக அமரச்செய்ய வேண்டும் .பின் மணமகளை முகூர்த்த ஆடை மாலைகளுடன் அழைத்து வந்து மணமேடைக்கு மேல்புறம் கிழக்கு முகமாக இடப்பட்ட நாற்காலியில் மணமகனுக்கு எதிரே உட்காரச் செய்ய வேண்டும் .